உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டை: 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது

சென்னை: தீபாவளி கொலைகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தீபாவளியன்று தமிழகம் முழுவதும் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்…