உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'வட மாநிலங்களை போல து@ப்பாக்கி கலாச்சாரம்; அச்சத்தின் பிடியில் தமிழ்நாடு'-எடப்பாடி கண்டனம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.…