Dinamani, Sports
பௌமிக், பிரியானுஜ் சாம்பியன்
டபிள்யுடிடி யூத் கன்டென்டா் போட்டி யு-19 மகளிா் பிரிவில் திவ்யான்ஷி பௌமிக்கும், ஆடவா் பிரிவில் பிரியானுஜ் பட்டாச்சாா்யாவும் பட்டம் வென்றனா். வண்டலூா் அடுத்த மேலக்கோட்டையூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை. வளாகத்தில் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் இப்போட்டி நடைபெறுகிறது. திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் முதல் நிலை வீராங்கனை இந்தியாவின் திவ்யான்ஷி பௌமிக் 11-7, 11-4, 9-11, 11-7 என சயானிகா மாஜியையும்…