Indian Express Tamil
மதுரை ராஜாஜி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் மெகா திட்டம்; ரூ.66.93 கோடியில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு
தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய தமிழகப் பகுதி மக்களின் மருத்துவச் சேவைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தம் ரூ.66.93 கோடி மதிப்பீட்டில் நவீன தீவிர சிகிச்சை பிரிவுகள் (சி.சி.பி) அமைக்க நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின்’ (பி.எம் - அபிம்) கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 கூட்டு நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சட்டமன்ற அறிவிப்பும் அரசாணையும் கடந்த 17.08.2026-ல் நடைபெற்ற சட்டமன்றக் கூட…