Daily Thanthi
மும்பையில் ரூ.4 கோடி மதிப்புள்ள 13 ஆயிரம் இ- சிகரெட்டுகள் பறிமுதல்
மும்பை, மராட்டிய மாநிலம், நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள சரக்குகளை கையாளும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 13 ஆயிரம் இ- சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 கோடி என தெரிவித்தனர். இ- சிகரெட்டுகளை தயாரிப்பது, ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, விநியோகம்…