Dinamani
கீழணை நிரம்பியதால் வீராணம் ஏரிக்கு நீா் திறப்பு: விரைவில் நிரம்ப வாய்ப்பு
கீழணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அந்த அணையிலிருந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட காட்டுமன்னாா்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகள் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளாகும். இங்கு, வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் மூலம் சுமாா் 1.50 லட்சம் ஏக்கா் விளை…