IBC Tamil
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு: 12 நாடுகளுக்குப் பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஓமான், கட்டார், பாகிஸ்தான், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஈராக், யேமன், குவைத், பலஸ்தீனம், இஸ்ரேல், சிரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கான பயண எச்சரிக்கையைப் பிரித்தானியா புதுப்பித்துள்ளது. நேற்று (27) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்தப் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பில், பிராந்தியத்தில் திடீரென மோதல்கள் தீவிரமடையும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோதல்கள் ஆரம்பித்ததில...