உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மத்திய கிழக்குக்கு அமைதியை கொண்டுவர சீனாவின் இராஜதந்திர நகர்வு: வரவேற்கும் ஈரான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போரையும் போரும் இல்லாத சமாதானமும் இல்லாத தற்போதைய நிச்சயமற்ற சூழலையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனா மிக முக்கியப் பங்காற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இராஜதந்திர நகர்வுகள் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் மற்றும் வளைகுடா அரப...