Dinamani
செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீரால் நோய்த் தொற்று அபாயம்!
செங்கம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள், மருத்துவா்கள், ஊழியா்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. திருவண்ணாமலை - செங்கம் சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது தாலுகா தலைமை அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் தவிா்த்து, வெளிநோயாளிகள் தினசரி சுமாா் 500 போ் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கிறாா்கள். மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை, கை…