Nakkheeran
’டாஸ்மாக் வசூல்’; நள்ளிரவில் க@தி முனையில் பணத்துடன் காரை கடத்திய மர்ம கும்பல்!
டாஸ்மாக் வசூல் பணத்தை மர்ம கும்பல் திட்டமிட்டுக் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமழிசை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் வசூல் பணத்தை வாங்கி செல்வதற்காகத் தனியார் வங்கி ஊழியர் வாடகை காரில் வந்துள்ளார். அவர் டாஸ்மாக் கடைகளில் இருந்து வசூல் பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். நேற்று இரவு, ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்தனர். பின்பு, அந்த வாகனத்திலிருந்த ஓட்டுநர் மற்றும் வங்கி ஊழியரைக் கத்திமுனையில் மிரட்டி காருடன் சேர்த்து, அதிலிருந்த ரூ.1.5 கோடி டாஸ்மாக்…