Indian Express Tamil
பொது நூலகங்களில் ஜீன் டிரேஸ், பாரதியார் பெயரில் போலி புத்தகங்கள் கண்டெடுப்பு: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
எழுதியவர்: வினீத் உபாத்யாயா தமிழ்நாட்டின் பொது நூலகங்களில், பொருளாதார அறிஞர் ஜீன் டிரேஸ் எழுதியதாகக் கூறி வைக்கப்பட்டிருந்த போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதியதாகவும் சில போலி புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய புத்தகங்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், இது வாசகர்களின் சரியான தகவல்களைப் பெறும் உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றும், இதைக் கண்டு பாரதியார் "தனது கல்லறையில் புரண்டு படுப்பார்" என்றும் குறிப்பி…