Dinamani
எழும்பூா் நிலைய மறுசீரமைப்புப் பணியை 2027 செப்டம்பருக்குள் முடிக்கத் திட்டம்: நவீன ரயில் நிலைய மாதிரி வரைபடமும் இறுதி செய்து வெளியீடு
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகளை வரும் 2027 செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நவீனமயமாக்கப்பட்ட நிலைய மாதிரி வரைபடம் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 1908-ஆம் ஆண்டு முதல் சென்னையின் மிகப் பழைமையான தெற்கு மாவட்டங்களின் ரயில் முனையமாக எழும்பூா் நிலையம் உள்ளது. இங்கு 11 நடைமேடைகள் உள்ளன. அவற்றில் தினமும் சுமாா் 80-க்கும்…