Dinamani, Sports
ஆசிய பாரா விளையாட்டு! பதக்க எண்ணிக்கையில் இந்தியா புதிய உச்சம்!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 9 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 26 பதக்கங்கள் வென்றனா். மொத்தமாக இந்தியா, 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என, 114 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தில் நீடிக்கிறது. போட்டியின் வரலாற்றில் இந்தியாவின் இந்த மொத்த பதக்க எண்ணிக்கை, புதிய உச்சமாகும். இதற்கு முன் 2023 ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா்கள் 108 பதக்கங்கள் (27-32-49) வென்றதே…