Vikatan
குறைகள் தீர்க்கும் குத்தாலம் சோழீஸ்வரர் ஆலயம்: ஏழரை சனியின் கஷ்டங்கள் தீர்க்கும் பாதாள சனீஸ்வரர்!
கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்திலுள்ள குத்தாலத்தில் பிரதான சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயம். இந்த ஊரில் பஞ்ச பூதங்கள் வழிபட்ட ஐந்து சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சோழீஸ்வரர் ஆலயமும் ஒன்று என்பது சிறப்பு. இந்தத் தலத்தின் பெருமையைப் பேசுகிறது 'திருத்துருத்திப் புராணம்' என்கிற நூல். இரண்டு ஆறுகளுக்கிடையில் உண்டான மணல்திட்டு போன்ற இடைக்கழிப் பகுதிக்குத் 'துருத்தி' என்பது பெயர். காவிரிக்கும், அதன்…