Nakkheeran
பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை!
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி நாளை (13.11.2026) காலை 10:45 மணியளவில் பிரசாந்தி குதிரத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது அங்குள்ளவர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார். அதன் பின்னர் பிற்பகல் 12:45 மணியளவில் தாவரக்கெரேவிலிருந்து பெங்களூரு ஐ.ஐ.எம். மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ சேவையைப் பிரதமர் தொடங்கி வைத்து பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து நண்பகல்1.15 மணியளவில் பெங்களூருவில் ரூ.15,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்…