Nakkheeran
அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்லேகர் சந்திப்பு; தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!
ஜம்மு காஷ்மீரில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அங்கு செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக நாளை (13.11.2026) காலை டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். ஏற்கெனவே, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆளுநர் தரப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேல…