Hindu Tamil Thisai
மேலும் 2 வழக்கில் ஜெம் வீரமணி கைது
சென்னை: ஜெம் வீரமணியை மேலும் 2 போக்சோ வழக்கு களில் கைது செய்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் சென்னை போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் நவ.10 ரிமாண்ட் செய்து நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கைதான ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளனர்…