IBC Tamil
சுயநலவாதத் துறவிகளால் அநுராதப்புரத்தில் இழிவு செய்யப்பட்ட பௌத்தத்தின் புனிதம்
அமைதி, கருணை மற்றும் அகிம்சை ஆகியவற்றை உலகுக்குப் போதித்த கௌதம புத்தரின் உன்னத தர்மம், இன்று இலங்கையில் ஒரு சில சுயநலவாதத் துறவிகளால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. உலக இன்பங்களையும், ஆசைகளையும், பற்றுக்களையும் துறந்ததன் புனித அடையாளமாகக் கருதப்படும் சீவரம் எனப்படும் காவி உடையின் மாண்பு, அதே காவி உடையை அணிந்தவர்களாலேயே இன்று வீதியில் இழுத்து எறியப்பட்டுள்ளது. இலங்கையின் பௌத்த வரலாற்றிலும், பௌத்த மக்களின் ஆன்மீக வாழ்விலும் மிக உயர்வாகப் போற்றப்படும் அநுராதபுரம் ருவன்வெலிசா...