Indian Express Tamil
சிலிண்டர் சீக்கிரம் தீர இதுவும் ஒரு காரணமா? சமையலறையில் பலரும் செய்யும் இந்தத் தவறுகளைத் திருத்துங்க
இன்றைய குடும்பச் செலவுகளில் சமையல் எரிவாயுவான LPG-க்கும் முக்கியப் பங்கு உண்டு. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டருக்காகச் செலவிடும் தொகையைக் குறைப்பது பல குடும்பங்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், சமையல் எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. சமையலறையில் நாம் அன்றாடம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே எரிவாயுவை வீணாக்காமல் சேமிக்க முடியும். அடுப்பைப் பயன்படுத்தும் முறை, பாத்திரங்களைத் தேர்வு செய்வது, உணவுப் பொருட்களைத் தயார்படுத்துவது எனப் பல விஷயங்கள் கேஸ…