Dinamani
திருவண்ணாமலையில் மாயமான 3 மாணவிகள் சென்னையில் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போலீஸாா் மீட்டுள்ளனர். தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா்- ஜோதி தம்பதியின் மகள்கள் மகாலட்சுமி (15), மகேஸ்வரி (14). இவா்கள் இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். பெற்றோா் இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து…