IBC Tamil
பெண்களைத் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1,250 கோடி நிதியுதவித் திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு
பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்குவதற்காக 12.5 பில்லியன் ரூபாய் (1,250 கோடி ரூபாய்) பெறுமதியான நிதியுதவித் திட்டமொன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்கமைய, சமுர்த்தி வங்கிகள் ஊடாக இக்குடும்பங்களுக்கு வருடாந்தம் 3 சதவீத சலுகை வட்டி வீதத்தில் கடன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் கீழ், தகுதியுடைய பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) வரையான கடன்களைப் பெற்றுக்கொள்ள ம...