IBC Tamil
செம்மணி புதைகுழி கைவிடப்பட்ட விவகாரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் - முன்னாள் எம்.பி
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழிகளைப் போன்று பூசி மெழுகப்பட்டு, கைவிடப்பட்ட ஒரு விவகாரமாக மாறிவிடுமோ என்ற ஆழமான அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "ஏற்கனவே இந்தச் செம்மணி புதைகு...