Indian Express Tamil
எஸ்.பி வேலுமணி வழக்கில் திடீர் திருப்பம்; 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து நடத்த மத்திய அரசு
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன், அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கே.எஸ். கந்தசாமி மற்றும் கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் கே. விஜய கார்த்திகேயன் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தயார் செய்தது. கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்; 150 இருக்கைகளுடன் களமிறங்கும் காமராஜர் படகு அதிகாரிகள் மீது வழக்குத் தொடர உரிய அனுமதி பெறுவத…