உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'படையெடுப்பை தடுத்த ஜீவநதி... ஒரே இரவில் 200 பேரை இரையாக்கிய பாலாறு'-வாணியம்பாடி மறக்காத வடு

வரலாற்றின் பக்கங்களில் சில தேதிகள் கண்ணீரால் எழுதப்பட்டவை. அப்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மக்களின் மனதில் இன்றும் ஆறாத வடுவாகப் பதிந்திருக்கும் ஒரு கருப்பு தினம் 1903-ஆம் ஆண்டு நவம்பர் 12. வட இந்திய மன்னர்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து நுழைய முடியாமல் நீண்ட காலம் தடுத்து நிறுத்திய இயற்கை அரணாக விளங்கியது பாலாறு எனச் சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமையுடன் பறைசாற்றுகின்றன. பாலாற்றைக் கடந்து எப்படித் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தோம் என்பதை விஜயநகரப் பேரரசின் வரலாறும் வியப்புடன் விவரிக்கிறது. சென்னை அண்ணா சாலையின் அகலத்தைவிடப் பத்து மடங்கு பிரம்மாண்ட அகலத்துடன், ஒரு நூற்றாண்டுக்கு முன்புவர…