Hindu Tamil Thisai
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ரயில்வேஸ் அணி 53.3 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுபைர் அலி 75 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 25 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 71…