Polimer News
ஓலா, உபர் கட்டணங்களையும் உயர்த்துங்க... ஆட்டோ கார் கூட்டமைப்பு போராட்டம்
தமிழ்நாடு அரசால் திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தைவிட ஓலா, உபர் கார்களுக்கான கட்டணத்தை குறைவாக வசூலிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ கால்டாக்சி கூட்டமைப்பு சார்பில் உபேர் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஆட்டோ மீட்டர் கட்டணம் 1.8 கிமீ தொலைவுக்கு 50 ரூபாய் கட்டணமாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு கிமீ தொலைவுக்கும் தலா 25 ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. பல்க் பெர்மிட் வைத்துள்ள உபர் , ஓலா போன்ற நிறுவனங்கள் கார்களுக்கு 1 கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்து வருவதால் மக்கள் ஆட்டோவை விட கார்களை தான் நோக்கி செல்கிறார்கள்.…