Nakkheeran
’பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை’; பயணத்தை இனிதாக்க அரசின் அதிரடி திட்டம்!
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தரும் மாநிலத்தின் மிக முக்கிய பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை வசதிகளை ஏற்படுத்தத் தெலுங்கான அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வசதியின் மூலமாகப் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தினால் பயணிகள் பேருந்து குறித்தான தகவல்களைத் தேடவும், காத்திருப்பு நேரங்களில் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்…