Polimer News
பெங்களூருவில் மின்சார டாக்சிகளை அறிமுகப்படுத்தும் Vingroup!
தூத்துக்குடியில் மின்சார கார்களைத் தயாரித்துவரும் வியட்நாம் நாட்டின் Vingroup நிறுவனம், பெங்களூருவில் Green SM என்ற பெயரில் மின்சார டாக்சி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிலோமீட்டருக்கு 8 ரூபாய் மட்டுமே அந்நிறுவனம் வசூலித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், Vingroup நிறுவன வருகையால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என போர்க்கொடி தூக்கும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள், அதன் உரிமத்தை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.