Nakkheeran
“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மோசமான ஆட்சி நடக்கிறது” - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (12-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுகவின் நிலவரம் நன்றாகத் தான் இருக்கிறது, மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிமுக எப்போது தேர்தல் வந்தாலும் சரி, இடைத்தேர்தல் வந்தாலும் சரி சந்திக்க தயார். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ஆட்சி மிக மிக மோசமான ஆட்சி. இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலம், தமிழ்நாடு தான். கொலைகள் நடக்காத நாள் இல்லை. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. போதைப் பொருள் நடைபெறுகின்ற காரணத…