உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘சண்டியர்’ விவகாரம் - கமல்ஹாசனுக்கு கெடு விதித்த கிருஷ்ணசாமி

கமல்ஹாசன் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கும் படத்திற்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ‘பழிவாங்குதல் இரத்தத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்படும்’ என்ற வாசகமும் இடம் பெற்றது. இந்த வாசகத்துக்கும் படத்தின் தலைப்பிற்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவர் இதற்கு முன்பு 2003ஆம் ஆண்டு இதே சண்டியர் தலைப்பில் கமல்ஹாசன் அறிவித்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்பு அப்படம் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டு வெளியானது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…