Indian Express Tamil
சிகன்காரி வேட்டி சட்டையில் அனிருத்; மலர் லெஹங்காவில் அசத்திய காவியா: டிசைன் குறித்து ஆடை வடிவமைப்பாளர் விளக்கம்
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு வாழ்த்துகள்! தமிழ் இசையமைப்பாளர் அனிருத், ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் திருமணம் நேற்று இரவு கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. இந்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் திருமண நாளின் தோற்றம் இந்த திருமணத்தில், அமி படேல் அவர்களின் ஆடை வடிவமைப்பு ஆலோசனையில், மணமக்கள் தங்களது சிறப்பு நாளுக்காக ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானியைத் தேர்ந்தெடுத்தனர். பீச், செம்பு மற்றும் வெண்கல நிறங்களின் மென்மையான கலவையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லெஹங்காவில் ம…