உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'புத்தக கொள்முதல்; காலங்காலமாக நடக்கும் பெரிய 'லாபி'-உடைக்கும் நீதிபதி ஹரிபரந்தாமன்

அரசு அமைக்கும் விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் கிடப்பில் போடப்படுவதும், பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் நடக்கும் முறைகேடுகளும் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"அரசாங்கம் அமைக்கும் ஆணையங்களின் அறிக்கைகள் வெளிவருவதில்லை, அவை கிடப்பில் போடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முழுமையான உண்மையல்ல. நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை பொதுவெளியில் கிடைக்…