Indian Express Tamil
தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைப் பதிவு; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட கேரள காங்கிரஸ்
எழுதியவர்: ஷாஜு பிலிப் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவுக்காக, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி (KPCC) நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இந்தப் பதிவு கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும், அனுமதியின்றி வெளியிடப்பட்டதாகவும் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி, கேரள காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், தலைமை நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவருக்குப் பதிலாக வேறொருவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப…