Polimer News
எண்ணூரில் கடற்கரையைத் தாண்டி ஆக்ரோஷமாக எழும்பிய கடல் அலைகள்..!
அர்னாப் புயலையொட்டி ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாட்டில் வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்பட்டன. சென்னை எண்ணூரில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. கரையைத் தாண்டி சாலைகளிலும், குடியிருப்புகளிலும் கடல்நீர் சூழ்ந்தது. மக்கள் இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் வாகனங்களில் வந்து ராட்சத கடல் அலைகளுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி அனுப்பினர். மேலும் ராட்சதக் கடல் அலைகளால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் இரவோடு, இரவாக மாநகராட்சிப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு அகற்றினர்.