உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Live Updates: “பன்ச் டயலாக் பேச மட்டும்தான் முதல்வர் வாயைத் திறப்பார்” - விஜய்யை விமர்சித்த கனிமொழி

கரையை கடந்தது அர்னாப் புயல்: ஆந்திர மாநிலம் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையிலான கடல் பகுதியில் அர்னாப் புயல் கரையை கடந்தது. புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் நிலையில் காலை 11:30 மணிக்கு தீவிரப்புயலாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சேகர்பாபு மீது வழக்குப்பதிவு: சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாயிலில் வாக்குவாதம் செய்த திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாக…