Indian Express Tamil
அடுத்த பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல தயாரா? தொடங்கியது பொங்கல் முன்பதிவு; ஒரு நிமிடத்தில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
2027-ம் ஆண்டின் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கலைத் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாட ரயில் சேவையையே முதன்மையாக நம்பியுள்ளனர். வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (வியாழன்) போகிப் பண்டிகையும், ஜனவரி 15-ம் தேதி (வெள்ளி) தைப்பொங்கலும், ஜனவரி 16-ம் தேதி (சனி) மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17-ம் தேதி (ஞாயிறு) காணும் பொங்கல…