Vikatan
வீட்டுக்குள் சினிமா... மொட்டைமாடியில் Jacuzzi - மாதம்பட்டியில் வீக் எண்டுக்கான ஒரு கனவு வீடு.!
நகர வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து விடுபட்டு, வார இறுதியில் குடும்பத்துடன் இயற்கையின் மடியில் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசைக்கு, கோவை மாவட்டம் மாதம்பட்டியில் வடிவம் கொடுத்திருக்கிறார் ஆர்க்கிடெக்ட் சிங்காரம். 8,500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் இந்த வீடு, வீடா ரிசார்ட்டா என்று யூகிக்க முடியாத அளவுக்கு இரண்டையும் ஒருசேரத் தருகிறது. தேவகோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட ஆர்க்கிடெக்ட் சிங்காரம், கோவையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாடு காலேஜ்…