சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களை கண்காணிக்க AI தொழில்நுட்பம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்?
சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், வாகன நிறுத்தங்களை ஒழுங்குபடுத்தவும் எட்ஜ் ஏஐ என்ற புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை பெருநகர சென்னை போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை இரண்டு வரிசைகளில் நிறுத்துவது, நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் கார், பைக் மற்றும் ஆட்டோக்களை உடனடியாக அடையாளம் காணும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும். கேமராவில் பதிவாகும் காட்சிகள் உடனுக்குடன் அங்கேயே பகுப்பாய்வு செய்யப்படுவதால், இணைய வேகம் குறைவாக இருந்தாலும் தாமதமின்றி வ…