உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வ@முறைகளுக்கு இதுதான் காரணம்” - மனம் திறந்த போப் லியோ!

சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க கலாச்சாரம் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுப்பதாக போப் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ஆணும் பெண்ணும் சமமான கண்ணியமும் பொறுப்பும் கொண்டவர்கள் என்கிற கிறிஸ்தவ போதனைகளுக்கு, இது எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளுக்கு போப் லியோ அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பெரு நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள போப் லியோ, அங்கு நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் லிமாவில் உள்ள தேவாலயத்திற்கு வெளிய…