Indian Express Tamil
ஒசாமா பின்லேடன் வேட்டையில் பிரபலமான நாய்கள்... மும்பை போலீஸ் படையில் பெல்ஜியன் மாலினாய்ஸ் இனத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏன்?
எழுதியவர்: மணீஷ் கே பதக் 2019ஆம் ஆண்டு மும்பை போலீஸ் நாய் படையில் முதன்முறையாக ஐந்து பெல்ஜியன் மாலினாய்ஸ் நாய்கள் சேர்க்கப்பட்டன. அதுவரை லாப்ரடார் மற்றும் டாபர்மேன் வகை நாய்கள் அதிகம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த இன நாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். வெடிகுண்டுகளைக் கண்டறிதல், முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் பெரிய அளவிலான பொது நிகழ்ச்சிகளுக்கு முன்பாகச் சோதனை நடத்துதல் ஆகிய பணிகளை வலுப்படுத்த மேலும் ஆறு நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், நாய் படையில் உள்ள மற்ற இன நாய்களைப் படிப்படியாக ஓய்வுபெறச் செய்து, பெல்ஜியன் மாலினாய்ஸ் நாய்களை மட்டுமே தொடர்ந…