Hindu Tamil Thisai
போக்குவரத்துக் கழகங்கள் அவதி: வெற்றிப் பயண திட்ட நிதியை அரசு வழங்க அன்புமணி கோரிக்கை
சென்னை: “வெற்றிப் பயண திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்ற போக்குவரத்துக் கழகங்களின் எதிர்பார்ப்புகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடு…