உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் ரூ.120 கோடி நஷ்டம்”; நவ.3 முதல் பேருந்துகள் ஓடாது?

வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களுக்கான ’இலவச பேருந்து பயணத் திட்டம்’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இந்த திட்டம், இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்கள், இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நமது அண்டை மாநிலமான கேரளத்தில், தற்போது ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், ’பிரியதர்ஷினி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள…