Indian Express Tamil
பிரபஞ்சத்தின் தோற்றம்: இரண்டு பில்லியன் ஆண்டுகளின் பரிணாமப் பதிவு
பெருவெடிப்பு நிகழ்ந்த சில பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் எவ்வாறு இருந்தது என்பதைக் காட்டும் மிகவும் துல்லியமான மற்றும் விரிவான மாதிரிப் போலி ஒன்றை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். 'லூமினா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரியானது, பெருவெடிப்புக்கு பிந்தைய இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் அடைந்த பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. ஹார்வர்ட் காலேஜ் அவ்சர்வேட்டரி மற்றும் ஸ்மித்சோனியன் அஸ்ட்ரோபிஸிகல் அப்சர்வேட்டரி ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படும் 'சென்டர் ஃபார் அஸ்ட்ரோபிசிக்ஸ்' நிறுவனத்தால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில், ஒளி உமிழும் வாயுக்கள்…