Polimer News
டிஜிட்டல் அரெஸ்ட் - தடை செய்யப்பட்ட சாதனங்கள் பறிமுதல்..!
திருச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்களை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட Sim boxes என்ற சாதனம் உறையூரில் உள்ள ஓரிடத்தில் பயன்படுத்தப்படுவதாக தொலைதொடர்பு துறை அதிகாரிகள் மூலம் ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், சிம் பாக்ஸசுடன், சிசிடிவி ஹார்ட் டிஸ்குகள், வைபை மோடம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக மாநகர காவல் துணை ஆணையர் மணிகண்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் அவரைப் பற்றிய விவரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.