Indian Express Tamil
சீரமைக்கப்படும் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை: கிராம மக்களின் பாதுகாப்பிற்காக ஒருவழிப் பாதையாக மாற்றக் கோரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. குறிப்பாக, பார்லியார் சாலையில் மண் சரிவுகள், பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து சாலை மூடப்பட்டதால் அப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி கடந்த சனிக்கிழமை மாலை முதல் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. தற்போது மாவட்டத்தில் மீண்டும் சுற்றுலாத…