Indian Express Tamil
கழிப்பறை ஃப்ளஷில் இருக்கும் 2 பொத்தான்களின் பின்னணி என்ன? தண்ணீர் சேமிக்கும் டெக்னிக் இது தான்
இன்றைய நவீன வீடுகளில் பல்வேறு வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது பெரும்பாலான வீடுகளில் இரட்டை பொத்தான்கள் கொண்ட நவீன கழிப்பறை ஃப்ளஷ் டேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஃப்ளஷ் டேங்கைக் கவனித்தால், அதில் ஒரு சிறிய பொத்தானும், மற்றொன்று பெரிய பொத்தானுமாக இரண்டு பொத்தான்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், பலரும் இந்த இரண்டு பொத்தான்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் இரண்டு பொத்தான்களையும் ஒரே நேரத்தில் அழுத்துகின்றனர். உண்மையில், இந்த இரண்டு பொத்தான்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை என்பது பலருக்கும் தெரிவதில்லை. இவற்றைச் சரியாகப் பயன்ப…