Indian Express Tamil
நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற போது நேர்ந்த விபத்து: பார்சல் வேன் மோதியதில் தந்தை, மகன் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகச் சென்ற தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த இந்த விபத்தில், தனியார் பார்சல் சர்வீஸ் வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (50). இவரது மகன் மகேந்திரன் (20). இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இன்று காலை ஒரே இருசக்கர வாகனத்தில் புறப்பட…