Indian Express Tamil
ரூ.2 லட்சத்துக்கு மேல விலை: இந்த விவோ ஃபோல்டபிள் போன் வாங்குறது ஒர்த்தா? உண்மையான ரிவ்யூ
பொதுவாக ஒரு ஃபோல்டபிள் போன் வாங்குறீங்கன்னா, ஏதாச்சும் ஒன்றை கண்டிப்பா விட்டுக் கொடுக்கணும். ஒன்னு நல்ல கேமரா இருக்காது, இல்லன்னா பேட்டரி சீக்கிரம் தீர்ந்துடும். "பெரிய ஸ்கிரீன் கிடைக்குதே, கேமராவும் பேட்டரியும் கொஞ்சம் கம்மியா இருந்தா என்ன?"னு மக்கள் பழகிட்டாங்க. ஆனா, 2026-ல அந்த மாதிரி எந்த சமரசமும் செய்யவே தேவையில்லைனு கெத்தா களத்துல இறங்கியிருக்கு விவோ எக்ஸ் ஃபோல்டு 6 (Vivo X Fold 6). இந்த போனை ஒரு ரெண்டு வாரம் தொடர்ந்து பயன்படுத்திய அனுபவத்தை ரொம்ப சுலபமா தெரிஞ்சுக்கலாம் வாங்க. ஆங்கிலத்தில் வாசிக்க கையில எடுக்கும்போது மத்த ஃபோல்டபிள் போன்கள் மாதிரியே தான் ஃபீல் ஆகுது. "இதுல என்னப்பா பெரி…