Polimer News
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் அதிகரிக்குமா?
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் வரும் 3ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 3ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், வட மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வரும் 1ஆம் தேதி வரை பகல் நேர வெப்பநிலை அதிகரி…