Indian Express Tamil
'இது டீம் கேம்; எல்லா இடத்துலயும் தமிழ்நாடு பிளேயருக்கு ஃபேவர் பண்ண முடியாது': இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா ஓபன் டாக்
முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, 38-10 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த அரைஇறுதி போட்டி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (அக்.30) மாலை 6 மணி முதல் தொடங்கி நடக்கிறது. கண் கலங்கிய கண்ணகி நகர் கார்த்திகா இந்நிலையில், இந்த காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் களமாடி இருக்கும் கண்ணகி நகர் கார்த்திகா மைதானத்திலே கண்கலங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்…